Skip to main content

Posts

Showing posts from November, 2019

வானிலை அறிவிப்பு

தூத்துக்குடி இராமநாதபுரம் மாவட்டங்களின் கடலோர பகுதியில் இன்று கனமழை பெய்யும். கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு   இல்லை. கன்னியாகுமரி மேற்கு பகுதியில் மழை பெய்யாது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு சில பகுதியில் மட்டுமே காலை நேரத்தில் லேசான மழை பெய்யும். தூத்துக்குடி இராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை முதல் பருவமழை தீவிரமடையும்.

தென் தமிழக வானிலை அறிவிப்பு

 தூத்துக்குடி ராமநாதபுரம் கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும். கனமழையை பொறுத்தவரை தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் கடலோர பகுதியில் கனமழை பெய்யும். தூத்துக்குடி இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பை விட மிக அதிகம் மழை பெய்யும். இன்று இரவு தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசை உடன்குடி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மழை பெய்யும். 

அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை வரும் வாரத்தில் தீவிரமடையும். இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது. மதுரை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை. தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை குறைவாக இருக்குமோ என்று  நினைக்க வேண்டாம் பருவமழை நன்றாக பெய்யும். 

இன்றைய வானிலை அறிக்கை

இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தேனி திண்டுக்கல் கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென்காசி பாபநாசம் மாஞ்சோலை குமரி மேற்கு பகுதி புளியங்குடி ராஜபாளையம் கம்பம் குமுளி ஊட்டி பொள்ளாச்சி வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கும்.விருதுநகர் மதுரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கழுகுமலை திருவைகுண்டம் நாசரேத் பகுதியில் மழை பெய்யும்.

வானிலை அறிக்கை:

இன்று தஞ்சை கரூர் தர்மபுரி இராமநாதபுரம் சேலம் நாமக்கல் ஈரோடு திருச்சி விருதுநகர் திருப்பூர் நாமக்கல் திண்டுக்கல் கோவை மதுரை புதுக்கோட்டை திருநெல்வேலி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு பிறகு கனமழை பெய்யும். தென்தமிழகத்தை பொறுத்தவரை பாபநாசம் மாஞ்சோலை பணகுடி வள்ளியூர் கோவில்பட்டி ஆகிய பகுதியில் இன்று கனமழை பெய்யும். ஊட்டி கொடைக்கானல் வால்பாறை பகுதிகளிலும் இன்று மழை பெய்யும்.

மாலை நேர சிறப்பு வானிலை அறிக்கை:

தற்போது கடந்த சிலநாட்களாக தமிழகம் முழுவதும் கோடைகாலம் போல வெயில் அதிகமாக நிலவி வருகிறது. அதனால் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையை பொறுத்தவரை சிவகங்கை மதுரை விருதுநகர் திருச்சி சேலம் தர்மபுரி பெரம்பலூர் கரூர் நாமக்கல் புதுக்கோட்டை ஈரோடு கரூர் இராமநாதபுரம் தர்மபுரி திண்டுக்கல் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்பட்டி எட்டயபுரம் ஆகிய பகுதியில் நாளை மழை பெய்யும்.தற்போது கோவில்பட்டியில் கனமழை.

மழை நிலவரம்

கடந்த 24 மணிநேரத்தில் தற்போது காலை 7.25 மணி நிலவரப்படி திருப்பூர் தெற்கு 45 மிமீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை 31 மிமீ அவிநாசி 31மிமீ திருப்பூர் 24மிமீ. 

வானிலை அறிவிப்பு

தமிழகத்தில் கோவை நீலகிரி தேனி திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். தென் தமிழகத்தை பொறுத்த வரை ராஜபாளையத்தில் மட்டும் மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற படி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

முக்கிய அறிவிப்பு

நமது வானிலை பக்கத்தின் புதிய முயற்சியாக வானிலை அறிவிப்பை மேம்படுத்துவதற்காக இணையதளசேவை தொடங்கப்பட்டுள்ளது. அதிகப்படியான நண்பர்கள் இணைவதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது . தொடர்ந்து ஆதரவளியுங்கள்     https://chat.whatsapp.com/DWOWxS2mhabCcvMHiW3fsD