Skip to main content

Posts

Showing posts from May 15, 2020

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் குறித்து விளக்கம்:

காற்றழுத்தம் புயல் என்றால் என்ன? இப்பதிவை விளக்கமாக விளக்கியுள்ளேன் பாருங்கள். இது எல்லாம் தெரிந்து கொள்வது கட்டாயம். இது எல்லாம் பள்ளி பாடங்களிலே உள்ளது. உங்கள் வீட்டில் மாணவர்கள் இருந்தால் கட்டாயம் படிக்க சொல்லுங்கள். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கும் . மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம். அதென்ன காற்றழுத்தத் தாழ்வு நிலை கடற்பரப்பில் 26 °C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது.  அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது இதையே காற்றழுத்த தாழ்வு நிலை என்கிறோம். காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க காற்றழுத்த தாழ்வுநிலையானது படிப்படியாக  வலுவடைகிறது.  காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி. க...