Skip to main content

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் குறித்து விளக்கம்:

காற்றழுத்தம் புயல் என்றால் என்ன? இப்பதிவை விளக்கமாக விளக்கியுள்ளேன் பாருங்கள். இது எல்லாம் தெரிந்து கொள்வது கட்டாயம். இது எல்லாம் பள்ளி பாடங்களிலே உள்ளது. உங்கள் வீட்டில் மாணவர்கள் இருந்தால் கட்டாயம் படிக்க சொல்லுங்கள்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கும் . மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு நிலை

கடற்பரப்பில் 26 °C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது. 

அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது இதையே காற்றழுத்த தாழ்வு நிலை என்கிறோம்.

காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க காற்றழுத்த தாழ்வுநிலையானது படிப்படியாக  வலுவடைகிறது. 

காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.

காற்றானது மணிக்கு 32 - 51 கி.மீ வேகத்தில் வீசினால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

காற்றானது மணிக்கு 52 - 62 கி.மீ வேகத்தில் வீசினால் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.

காற்றானது மணிக்கு 63 - 87 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல்.

காற்றானது மணிக்கு 88 - 117 கி.மீ வேகத்தில் வீசினால்  தீவிர புயல்.

காற்றானது மணிக்கு 118 - 165 கி.மீ வேகத்தில் வீசினால்  மிகத் தீவிர புயல்.

காற்றானது மணிக்கு 165 - 221 கி.மீ வேகத்தில் வீசினால் கடும் தீவிர புயல்

காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால்  அதி தீவிர புயல். 

புயல் குறித்த எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாகத் துறைமுகங்களில் 11 விதமான புயல் கூண்டுகள் ஏற்றப்படும் அதன் விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1ம் எண் கூண்டு: புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது.
 
2ம் எண் கூண்டு: புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதிற்காக ஏற்றப்படுவது தான் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு. இதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்றப்படுகிறது.
 
3ம் எண் கூண்டு: திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
 
4ம் எண் கூண்டு: துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் இது கடற்கரையை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை
 
5ம் எண் கூண்டு: துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை.
 
6ம் எண் கூண்டு: துறைமுகத்தில் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்துசெல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
 
7ம் எண் கூண்டு:  துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை

8ம் எண் கூண்டு: ஏற்றப்பட்டால், புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கரையைக் கடந்து செல்லும்

9ம் எண்  கூண்டு: புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
 
10ம் எண் கூண்டு: புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்துசெல்லும் புயலால் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
 
11ம்  எண் கூண்டு :11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

தற்போது வங்ககடலில் உருவாக உள்ள புயலுக்கு ஆம்ஃபான் என்று பெயர் வைக்கபட உள்ளது. இப்பெயர் தாய்லாந்து நாடு வழங்கப்பட்ட பெயராகும். எப்போதுமே அரபிக்கடலில் உருவாகுகிற புயலை விட வங்க கடலில் உருவாகுகிற புயலுக்கு பலம் அதிகம். 

தொகுப்பு T.Raja Admin  Tamilnadu weather Blog

Comments

Popular posts from this blog

இந்தியாவில் காற்றின் தரம்:

தற்போது நாடு முழுவதும் வாகனங்கள் இயங்கவில்லை. மக்கள் எல்லாமே வீடுகளில் இருக்கிறார்கள். தற்போது இயற்கை எல்லாமே மிக சந்தோசமாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான பதிவு. டெல்லி போன்ற வட மாநிலங்களில் காற்றின் மாசுபாடு மிக அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வாகனங்கள் இயங்காததால் நம் நாட்டில் காற்றின் தரம் நன்றாக உள்ளது காற்றின் மாசுபாடு அதிகளவு குறைந்துள்ளது.இந்தளவுக்கு அடியோடு குறைந்துள்ளது என்பது ஆச்சர்யமான ஒன்று. தற்போது உலகம் முழுவதும் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்கிறது. இந்த நிலை எப்போதும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அங்கும் வன விலங்குகள் சுதந்திரமாக உள்ளனர். Source: Indian Air Quality Index சுற்றுசூழல் விழிப்புணர்வு பதிவு: காடுகள்தான் நம் தாய்திருநாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின்  காரணமா...

World forestry day 2020

பூமியை பல வகையில் பாதுகாத்து வரும் பசுமை போர்வையாம் காடுகள் பற்றியும் அதன் வளம் காப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் தினமாக இந்நாள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. காடு என்பது பல்வேறு உயிரினங்கள் ஒன்றிணைந்து அமையப்பெற்ற ஓர் சுழல் மண்டலமாகும். பல அரிய வகை மரங்களையும், ஏராளமான விலங்குகளையும் கொண்ட இயற்கை வரம்தான் காடு. பூமியின் மொத்த பரப்பளவில் 30 சதவீதம் காடுகளாலேயே அமைந்ததாகும். காடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. உலகத்திற்கு தேவையான மழையையும், சுத்தமான காற்றையும் வழங்குவதில் காடுகளின் பங்கு மிக மிக முக்கியமானது. உலகெங்கும் சூழ்ந்துள்ள காடுகள் அதனதன் தட்பவெட்ப நிலைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஊசியிலை காடுகள், சதுப்பு நில காடுகள், இலையுதிர் காடுகள், வெப்ப மண்டல காடுகள் என பல வகையில் அவைகள் பிரிக்கப்பட்டாலும் எல்லா காடுகளும் ஒருசேர்ந்த ஓர் முக்கிய பணியையே செவ்வனே செய்கிறது. அது புவிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை சுவாசித்து பூமிக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுவதுதான். ஒரு மரமானது ...

மாலை நேர சிறப்பு வானிலை அறிக்கை:

தற்போது கடந்த சிலநாட்களாக தமிழகம் முழுவதும் கோடைகாலம் போல வெயில் அதிகமாக நிலவி வருகிறது. அதனால் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையை பொறுத்தவரை சிவகங்கை மதுரை விருதுநகர் திருச்சி சேலம் தர்மபுரி பெரம்பலூர் கரூர் நாமக்கல் புதுக்கோட்டை ஈரோடு கரூர் இராமநாதபுரம் தர்மபுரி திண்டுக்கல் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்பட்டி எட்டயபுரம் ஆகிய பகுதியில் நாளை மழை பெய்யும்.தற்போது கோவில்பட்டியில் கனமழை.