Skip to main content

World forestry day 2020

பூமியை பல வகையில் பாதுகாத்து வரும் பசுமை போர்வையாம் காடுகள் பற்றியும் அதன் வளம் காப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் தினமாக இந்நாள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

காடு என்பது பல்வேறு உயிரினங்கள் ஒன்றிணைந்து அமையப்பெற்ற ஓர் சுழல் மண்டலமாகும். பல அரிய வகை மரங்களையும், ஏராளமான விலங்குகளையும் கொண்ட இயற்கை வரம்தான் காடு. பூமியின் மொத்த பரப்பளவில் 30 சதவீதம் காடுகளாலேயே அமைந்ததாகும்.

ஒரு மரமானது தன் சராசரி ஐம்பது வருட வாழ்நாளில் ஆறாயிரம் பவுண்ட் ஆக்சிஜனை வெளியிடுகிறதாம். இது ஒரு வருடம் முழுக்க நான்கு பேர் சுவாசிக்கக்கூடிய ஆக்சிஜனின் மொத்த அளவாகும். மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களும் இயற்கை வழியில் சுவாசிக்க மரங்களே காரணம். மேலும் பல்வேறு சீதோஷ்ண நிலையில் வாழக்கூடிய வனவிலங்குகளுக்கு இயற்கை சரணாலயமாக விளங்குவது காடுகள்தான். இதில் வெப்பமண்டல காடுகள் மட்டும் மனிதன் மட்டுமின்றி கிட்டத்தட்ட பூமியின் 50 சதவீதம் உயிரினங்களுக்கு உறைவிடமாக உள்ளது. அதுமட்டுமின்றி வெப்பத்தையும் குளிரையும் கட்டுப்படுத்தி சீரான காலநிலையை உண்டாக்குதல். பருவமழையின் அளவை அதிகரித்தல், மண் வளம் காத்தல், மண் அரிப்பு, நிலச்சரிவு, வெள்ள ஆபத்துகளை தடுத்தல் என காடுகளின் பயன்கள் மிகவும் ஏராளம்.. இது போன்ற அற்புத பயன்கள் கொண்ட காடுகள் மனிதனின் வாழ்வியல் நோக்கிற்காக வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது என்பது உலகை அச்சுறுத்தக்கூடிய பெரும் உண்மையாகும். ஒவ்வொரு ஆண்டும் பூமி 18.7 மில்லியன் ஏக்கர் காடுகளை இழந்து வருவதாக ஆய்வுகள் கூறுகிறது. ஏற்கனவே உலகின் வெப்பமண்டல காடுகள் பாதியாக குறைந்துவிட்டதாக சர்வதேச கணக்கெடுப்புகள் அதிர்ச்சி தகவல் தருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் நூறாண்டுகளில் மழைத் தரக்கூடிய காடுகள் முற்றிலும் அழிந்து விடும் நிலை ஏற்படலாம் என்றும் உலக அளவில் காடழிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று கூறுகிறது. இதன் காரணமாக அடுத்த கால் நூற்றாண்டில் பூமியில் இருந்து சுமார் 28 வகை உயிரினங்கள் இருந்த சுவடே தெரியாமல் அழிந்து போகலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நகரமயமாக்குதல், நிலம் ஆக்கிரமித்தல், வியாபார நோக்கிற்காக மரங்கள் வெட்டப்படுதல் என்று நீண்டு கொண்டே போகும் மனிதனின் தேவைக்காக காடுகள் அதி வேகத்தில் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மழையின்மை, புவி வெப்பமயமாகுதல், அரிய வகை விலங்குகள் அழிதல் மற்றும் உறைவிடம் தேடி காடு தாண்டி மனிதன் வாழும் இடங்கள் நோக்கி விலங்குகள் வருதல் என்று பல்வேறு மோசமான பின் விளைவுகளும் ஏற்பட்டுக்கொண்டுத் தான் இருக்கிறது.

மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, காற்று மாசு, புவி வெப்பமயமாகுதல் என்று பல்வேறு கேள்விகளால் திணறி வரும் மனிதனுக்கு இனி இயற்கைதான் விடையாகும். அந்த இயற்கையை பாதுகாப்பதை தவிர மனிதனுக்கு வேறு வழியில்லை. ஒரு மரம் ஏதோ ஒரு காரணத்திற்காக வெட்டப்படும் அதே நேரம் அதை ஈடு செய்ய பத்து மரம் நட வேண்டும் என்ற பொதுவிதியை நாம் அனைவரும் கட்டாயமாக கடைப்பிடித்தால் மட்டுமே இனி வருங்காலத்தில் காடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும். ஆதி மனிதன் காடுகளையே வீடாக கொண்டு வாழ்ந்தான். ஆனால் இன்றோ நவீன சாயல் பூசிக்கொண்ட தற்கால மனிதக்குலம் தன் முப்பாட்டன் வீட்டைத் தானே அழிக்கக்கூடாது என்பதை உணர்ந்தால் மட்டுமே காடுகள் அழிவதை தடுத்து, பின்வரும் தலைமுறைக்காக இயற்கையின் வளங்களை சேமிக்க முடியும். ஆகவே, உலக காடுகள் தினமான இன்று நாட்டின் வளம் காக்க காட்டின் வளம் காப்போம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

விலைமதிக்க முடியாத காடுகள் அழிக்கப்பட்டால் விலங்கினம், பறவையினம் எனப் பல்லுயிர்த்தன்மை அழியும். பல்லுயிர்த்தன்மை அழிந்தால் மனித இனம் எங்கே போகும்?

காடுகள் அழிவதில்லை. அழிக்கப்படுகின்றன. எங்கெல்லாம் காடுகளுக்கு எதிராக மனிதர்கள் செயல்படுகிறார்களோ, அங்கெல்லாம் நமது குறைந்தபட்ச எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். இது நாம் காடுகளுக்காக மட்டும் செய்வதில்லை. நமக்காகவே செய்துகொள்வதும்தான். நன்றி ஞா.நித்யா இணை பேராசிரியர் சென்னை.


Comments

Popular posts from this blog

இந்தியாவில் காற்றின் தரம்:

தற்போது நாடு முழுவதும் வாகனங்கள் இயங்கவில்லை. மக்கள் எல்லாமே வீடுகளில் இருக்கிறார்கள். தற்போது இயற்கை எல்லாமே மிக சந்தோசமாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான பதிவு. டெல்லி போன்ற வட மாநிலங்களில் காற்றின் மாசுபாடு மிக அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வாகனங்கள் இயங்காததால் நம் நாட்டில் காற்றின் தரம் நன்றாக உள்ளது காற்றின் மாசுபாடு அதிகளவு குறைந்துள்ளது.இந்தளவுக்கு அடியோடு குறைந்துள்ளது என்பது ஆச்சர்யமான ஒன்று. தற்போது உலகம் முழுவதும் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்கிறது. இந்த நிலை எப்போதும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அங்கும் வன விலங்குகள் சுதந்திரமாக உள்ளனர். Source: Indian Air Quality Index சுற்றுசூழல் விழிப்புணர்வு பதிவு: காடுகள்தான் நம் தாய்திருநாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின்  காரணமா...

மாலை நேர சிறப்பு வானிலை அறிக்கை:

தற்போது கடந்த சிலநாட்களாக தமிழகம் முழுவதும் கோடைகாலம் போல வெயில் அதிகமாக நிலவி வருகிறது. அதனால் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையை பொறுத்தவரை சிவகங்கை மதுரை விருதுநகர் திருச்சி சேலம் தர்மபுரி பெரம்பலூர் கரூர் நாமக்கல் புதுக்கோட்டை ஈரோடு கரூர் இராமநாதபுரம் தர்மபுரி திண்டுக்கல் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்பட்டி எட்டயபுரம் ஆகிய பகுதியில் நாளை மழை பெய்யும்.தற்போது கோவில்பட்டியில் கனமழை.