தற்போது நாடு முழுவதும் வாகனங்கள் இயங்கவில்லை. மக்கள் எல்லாமே வீடுகளில் இருக்கிறார்கள். தற்போது இயற்கை எல்லாமே மிக சந்தோசமாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான பதிவு. டெல்லி போன்ற வட மாநிலங்களில் காற்றின் மாசுபாடு மிக அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வாகனங்கள் இயங்காததால் நம் நாட்டில் காற்றின் தரம் நன்றாக உள்ளது காற்றின் மாசுபாடு அதிகளவு குறைந்துள்ளது.இந்தளவுக்கு அடியோடு குறைந்துள்ளது என்பது ஆச்சர்யமான ஒன்று. தற்போது உலகம் முழுவதும் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்கிறது. இந்த நிலை எப்போதும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அங்கும் வன விலங்குகள் சுதந்திரமாக உள்ளனர்.
ஒரு காடு அழியும் போது வெறும் மரங்கள் மட்டும் அழிவதில்லை, அங்கிருக்கும் அத்தனை தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஆகியவை எல்லாமே ஒட்டுமொத்தமாக அழிந்து விடுகின்றன. இதனால் ஏற்படும் நஷ்டம் சொல்லிமாளாது சிலர் காடுகளை அழித்து மரம் செடிகொடிகளை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள், இன்னும் சிலர் காட்டு விலங்குகளை வேட்டையாடி அவற்றின் கொம்பு, தந்தங்கள், தோல் ஆகியவற்றை விற்று பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். மிருகங்களும், பறவைகளும் அழிவதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. காடு அழிவதால் சுற்றுச்சூழல் அழிகிறது, பருவநிலையில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படுகின்றன. காடுகளை பாதுகாப்போம். அனைவரும் கட்டாயம் மரம் நடுவோம். நன்றி. T.Raja M.Sc.,B.Ed
Source: Indian Air Quality Index
சுற்றுசூழல் விழிப்புணர்வு பதிவு:
காடுகள்தான் நம் தாய்திருநாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின் காரணமாக கண்ணில் பட்ட மரங்களை எல்;லாம் வெட்டி சாய்த்து வருகின்றோமே. இவ்வாறு அதிகப்பரப்பில் இருந்த காடுகள் சென்ற நூற்றாண்டின் இறுதிக்குள் பாதிக்கு மேல் அழிந்து விட்டன மரம் என்றால் உயிர், இன்னும் சொல்லப்போனால் அதுவே நமக்கும் விலங்கு பறவைகளுக்கும் வாழ்வாதாரம். சிலபேர் நினைக்கிறார்கள், காடு இருப்பதால் யாருக்கு என்ன லாபம்? மரங்களை வெட்டி விற்றால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். காடுகளை அழித்து குடியிருப்புக்களைக் கட்டினால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். இந்த எண்ணம் தவறானது, இது போன்ற தவறான எண்ணத்தினால் தான் இதுவரையில் உலகத்தில் உள்ள காடுகளில் பாதிக்குமேல் அழிந்து விட்டது. காடுகள் சோலைவனங்கள் இந்த சோலைவனங்கள் அழியுமானால் நாம் பாலைவனத்தில் தான் வசிக்க வேண்டும்.
ஒரு காடு அழியும் போது வெறும் மரங்கள் மட்டும் அழிவதில்லை, அங்கிருக்கும் அத்தனை தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஆகியவை எல்லாமே ஒட்டுமொத்தமாக அழிந்து விடுகின்றன. இதனால் ஏற்படும் நஷ்டம் சொல்லிமாளாது சிலர் காடுகளை அழித்து மரம் செடிகொடிகளை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள், இன்னும் சிலர் காட்டு விலங்குகளை வேட்டையாடி அவற்றின் கொம்பு, தந்தங்கள், தோல் ஆகியவற்றை விற்று பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். மிருகங்களும், பறவைகளும் அழிவதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. காடு அழிவதால் சுற்றுச்சூழல் அழிகிறது, பருவநிலையில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படுகின்றன. காடுகளை பாதுகாப்போம். அனைவரும் கட்டாயம் மரம் நடுவோம். நன்றி. T.Raja M.Sc.,B.Ed
Comments
Post a Comment