Skip to main content

Posts

Showing posts from 2020

தென்னகத்தின் ஊட்டி மாஞ்சோலை:

தென்னகத்தின் ஊட்டி -மாஞ்சோலை: தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை மழை பிரதேசம் மாஞ்சோலை ஆகும்.  தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மிக அதிக மழை பெறும் பகுதி சின்னகல்லாறு.  ஆனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்தியநாட்டிலே மிக அதிகம் மழை பெறும் பகுதி மாஞ்சோலை ஆகும்.  குளிர் காலமான ஜனவரி பிப்ரவரி மாதத்திலும் இந்தியாவில் மிக அதிகம் மழை பெறும் பகுதியும் மாஞ்சோலைதான். ஜனவரி பிப்ரவரி மாதத்தில் மாஞ்சோலை 1000 மிமீ வரை மழை பொழிகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 2500 மிமீ வரை மழை பொழிகிறது . இது போக தென்மேற்கு பருவமழை காலத்திலும் தமிழகத்தில் அதிகம் மழை பெய்யும் பகுதிகளுள் மாஞ்சோலையும்  ஒன்று.  உலகில் மிக அதிகம் மழை பெய்யும் மௌசின்ராம் மற்றும் சிரபுஞ்சி ஆகிய பகுதிகளை பின்னுக்கு தள்ளி ஆண்டுக்கு 5 மாதங்கள் மாஞ்சோலைதான் முதலிடத்தில் இருக்கிறது. சில சமயங்களில் மாஞ்சோலையில் இரண்டு மூன்று நாட்கள் பெய்யும் மழைதான் மற்ற ஊரில் ஒராண்டு மழைப்பொழிவாக உள்ளது.  2007 ஆம்  ஆண்டு ஐந்தே நாட்களில் 1043 மிமீ மழை மாஞ்சோலையில் பெய்துள்ளது. இப்படி பலநேரங்க...

தென்னகத்தின் ஊட்டி மாஞ்சோலை:

தென்னகத்தின் ஊட்டி -மாஞ்சோலை: தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை மழை பிரதேசம் மாஞ்சோலை ஆகும்.  தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மிக அதிக மழை பெறும் பகுதி சின்னகல்லாறு.  ஆனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்தியநாட்டிலே மிக அதிகம் மழை பெறும் பகுதி மாஞ்சோலை ஆகும்.  குளிர் காலமான ஜனவரி பிப்ரவரி மாதத்திலும் இந்தியாவில் மிக அதிகம் மழை பெறும் பகுதியும் மாஞ்சோலைதான். ஜனவரி பிப்ரவரி மாதத்தில் மாஞ்சோலை 1000 மிமீ வரை மழை பொழிகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 2500 மிமீ வரை மழை பொழிகிறது . இது போக தென்மேற்கு பருவமழை காலத்திலும் தமிழகத்தில் அதிகம் மழை பெய்யும் பகுதிகளுள் மாஞ்சோலையும்  ஒன்று.  உலகில் மிக அதிகம் மழை பெய்யும் மௌசின்ராம் மற்றும் சிரபுஞ்சி ஆகிய பகுதிகளை பின்னுக்கு தள்ளி ஆண்டுக்கு 5 மாதங்கள் மாஞ்சோலைதான் முதலிடத்தில் இருக்கிறது. சில சமயங்களில் மாஞ்சோலையில் இரண்டு மூன்று நாட்கள் பெய்யும் மழைதான் மற்ற ஊரில் ஒராண்டு மழைப்பொழிவாக உள்ளது.  2007 ஆம்  ஆண்டு ஐந்தே நாட்களில் 1043 மிமீ மழை மாஞ்சோலையில் பெய்துள்ளது. இப்படி பலநேரங்க...

திருநெல்வேலி மாவட்ட மழை அளவுகள் :

திருநெல்வேலி மாவட்ட மழை அளவுகள் : தமிழகத்தில் மிக அதிகம் மழை பெய்யும் மாவட்டங்களுள் திருநெல்வேலியும் ஒன்று. 1951 முதல் 2000 ஆண்டு கால மழை அளவை எடுத்து பார்த்தால் திருநெல்வேலி மாவட்டம் 1000 மிமீ தாண்டி மிக மிக அதிகமான மழையை பெற்றுள்ளது. இதுவரை இம்மாவட்டத்தில் மழை பற்றாக்குறை என்பதே இல்லை என்பதை ஆய்வு முடிவுகளில் தெரிந்து கொள்ளலாம்.  1981-2000 வரை திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவான மழை அளவுகள் : 1981 1424 மிமீ 1982 1044 மிமீ 1983 1371 மிமீ 1984 1332 மிமீ 1985 1232 மிமீ 1986 1074 மிமீ 1987 1434 மிமீ 1988 1722 மிமீ 1989 1224 மிமீ 1990 1267 மிமீ 1991 1255 மிமீ 1992 1367 மிமீ 1993 1473 மிமீ 1994 1213 மிமீ 1995 1105 மிமீ 1996 1411 மிமீ 1997 1388 மிமீ 1998 1498 மிமீ 1999 1195 மிமீ 2000 1241 மிமீ தமிழகத்தில்  ஜனவரி மாதத்தில் மிக அதிகம் மழை பெய்யும் நாகை திருவாரூர் மாவட்டத்துக்கு அடுத்தப்படியாக திருநெல்வேலி மாவட்டம் அதிக மழை பெய்கிறது. கோடைகாலத்தில் தமிழகத்தில் மிக அதிக மழை பெய்யும் மாவட்டங்களில் திருநெல்வேலி 5 வது இடத்தை பெற்றுள்ளது. இது போக வடகிழக்கு பருவமழைகாலத்திலும் சராசரி மழை பொழிவு...

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் குறித்து விளக்கம்:

காற்றழுத்தம் புயல் என்றால் என்ன? இப்பதிவை விளக்கமாக விளக்கியுள்ளேன் பாருங்கள். இது எல்லாம் தெரிந்து கொள்வது கட்டாயம். இது எல்லாம் பள்ளி பாடங்களிலே உள்ளது. உங்கள் வீட்டில் மாணவர்கள் இருந்தால் கட்டாயம் படிக்க சொல்லுங்கள். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கும் . மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம். அதென்ன காற்றழுத்தத் தாழ்வு நிலை கடற்பரப்பில் 26 °C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது.  அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது இதையே காற்றழுத்த தாழ்வு நிலை என்கிறோம். காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க காற்றழுத்த தாழ்வுநிலையானது படிப்படியாக  வலுவடைகிறது.  காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி. க...

இந்தியாவில் காற்றின் தரம்:

தற்போது நாடு முழுவதும் வாகனங்கள் இயங்கவில்லை. மக்கள் எல்லாமே வீடுகளில் இருக்கிறார்கள். தற்போது இயற்கை எல்லாமே மிக சந்தோசமாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான பதிவு. டெல்லி போன்ற வட மாநிலங்களில் காற்றின் மாசுபாடு மிக அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வாகனங்கள் இயங்காததால் நம் நாட்டில் காற்றின் தரம் நன்றாக உள்ளது காற்றின் மாசுபாடு அதிகளவு குறைந்துள்ளது.இந்தளவுக்கு அடியோடு குறைந்துள்ளது என்பது ஆச்சர்யமான ஒன்று. தற்போது உலகம் முழுவதும் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்கிறது. இந்த நிலை எப்போதும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அங்கும் வன விலங்குகள் சுதந்திரமாக உள்ளனர். Source: Indian Air Quality Index சுற்றுசூழல் விழிப்புணர்வு பதிவு: காடுகள்தான் நம் தாய்திருநாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின்  காரணமா...

World forestry day 2020

பூமியை பல வகையில் பாதுகாத்து வரும் பசுமை போர்வையாம் காடுகள் பற்றியும் அதன் வளம் காப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் தினமாக இந்நாள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. காடு என்பது பல்வேறு உயிரினங்கள் ஒன்றிணைந்து அமையப்பெற்ற ஓர் சுழல் மண்டலமாகும். பல அரிய வகை மரங்களையும், ஏராளமான விலங்குகளையும் கொண்ட இயற்கை வரம்தான் காடு. பூமியின் மொத்த பரப்பளவில் 30 சதவீதம் காடுகளாலேயே அமைந்ததாகும். காடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. உலகத்திற்கு தேவையான மழையையும், சுத்தமான காற்றையும் வழங்குவதில் காடுகளின் பங்கு மிக மிக முக்கியமானது. உலகெங்கும் சூழ்ந்துள்ள காடுகள் அதனதன் தட்பவெட்ப நிலைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஊசியிலை காடுகள், சதுப்பு நில காடுகள், இலையுதிர் காடுகள், வெப்ப மண்டல காடுகள் என பல வகையில் அவைகள் பிரிக்கப்பட்டாலும் எல்லா காடுகளும் ஒருசேர்ந்த ஓர் முக்கிய பணியையே செவ்வனே செய்கிறது. அது புவிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை சுவாசித்து பூமிக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுவதுதான். ஒரு மரமானது ...

Tamilnadu Rainfall Data 2019

குளிர்காலமழை :ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் மிக அதிக மழை பெய்யும் மாவட்டங்கள் நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் கோடைமழை  மார்ச் முதல் மே வரையிலான கோடைகாலத்தில் தமிழகத்திலே மிக அதிகம் மழை பொழியும் மாவட்டம் கன்னியாகுமரி  ஆனால் 2019 ஆண்டு கோடைமழை அனைத்து மாவட்டங்களிலும் பற்றாக்குறைதான். தென்மேற்கு பருவமழை -2019 தென்மேற்குபருவமழை காலத்தில் தமிழகத்தில் மிக அதிகம் மழை பெய்த மாவட்டங்கள் :  1.நீலகிரி 1221மிமீ 2.கோயம்புத்தூர்-766மிமீ 3.திருவண்ணாமலை-683மிமீ 4.கன்னியாகுமரி -629 மிமீ 5.திருவள்ளூர் -589மிமீ  6.சென்னை மற்றும் அரியலூர்-587மிமீ தென்மேற்கு பருவமழை காலத்தில் மிக குறைவாக மழை பொழியும் மாவட்டங்கள்  1.தூத்துக்குடி  2.இராமநாதபுரம் 3.திருநெல்வேலி 4.திருப்பூர்.  வடகிழக்கு பருவமழை-2019 அக்டோபர்-டிசம்பர் வடகிழக்குபருவமழைைகாலத்தில் மிக அதிக மழை பெய்யும் மாவட்டம் நாகப்பட்டினம் இந்தமாவட்டம் இந்தாண்டு வடகிழக்கு பருவமழைகாலத்தில் இந்தியாவிலே மிக அதிகமழை பொழிந்துள்ளது. நாகப்பட்டினம்-1062மிமீ தூத்துக்...