Skip to main content

திருநெல்வேலி மாவட்ட மழை அளவுகள் :

திருநெல்வேலி மாவட்ட மழை அளவுகள் :

தமிழகத்தில் மிக அதிகம் மழை பெய்யும் மாவட்டங்களுள் திருநெல்வேலியும் ஒன்று. 1951 முதல் 2000 ஆண்டு கால மழை அளவை எடுத்து பார்த்தால் திருநெல்வேலி மாவட்டம் 1000 மிமீ தாண்டி மிக மிக அதிகமான மழையை பெற்றுள்ளது. இதுவரை இம்மாவட்டத்தில் மழை பற்றாக்குறை என்பதே இல்லை என்பதை ஆய்வு முடிவுகளில் தெரிந்து கொள்ளலாம். 

1981-2000 வரை திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவான மழை அளவுகள் :

1981 1424 மிமீ
1982 1044 மிமீ
1983 1371 மிமீ
1984 1332 மிமீ
1985 1232 மிமீ
1986 1074 மிமீ
1987 1434 மிமீ
1988 1722 மிமீ
1989 1224 மிமீ
1990 1267 மிமீ
1991 1255 மிமீ
1992 1367 மிமீ
1993 1473 மிமீ
1994 1213 மிமீ
1995 1105 மிமீ
1996 1411 மிமீ
1997 1388 மிமீ
1998 1498 மிமீ
1999 1195 மிமீ
2000 1241 மிமீ

தமிழகத்தில்  ஜனவரி மாதத்தில் மிக அதிகம் மழை பெய்யும் நாகை திருவாரூர் மாவட்டத்துக்கு அடுத்தப்படியாக திருநெல்வேலி மாவட்டம் அதிக மழை பெய்கிறது. கோடைகாலத்தில் தமிழகத்தில் மிக அதிக மழை பெய்யும் மாவட்டங்களில் திருநெல்வேலி 5 வது இடத்தை பெற்றுள்ளது. இது போக வடகிழக்கு பருவமழைகாலத்திலும் சராசரி மழை பொழிவு 473 மிமீ ஆனால் அதைவிட 600 மிமீ தாண்டி பல ஆண்டுகளில் மழை பதிவாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

இந்தியாவில் காற்றின் தரம்:

தற்போது நாடு முழுவதும் வாகனங்கள் இயங்கவில்லை. மக்கள் எல்லாமே வீடுகளில் இருக்கிறார்கள். தற்போது இயற்கை எல்லாமே மிக சந்தோசமாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான பதிவு. டெல்லி போன்ற வட மாநிலங்களில் காற்றின் மாசுபாடு மிக அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வாகனங்கள் இயங்காததால் நம் நாட்டில் காற்றின் தரம் நன்றாக உள்ளது காற்றின் மாசுபாடு அதிகளவு குறைந்துள்ளது.இந்தளவுக்கு அடியோடு குறைந்துள்ளது என்பது ஆச்சர்யமான ஒன்று. தற்போது உலகம் முழுவதும் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்கிறது. இந்த நிலை எப்போதும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அங்கும் வன விலங்குகள் சுதந்திரமாக உள்ளனர். Source: Indian Air Quality Index சுற்றுசூழல் விழிப்புணர்வு பதிவு: காடுகள்தான் நம் தாய்திருநாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின்  காரணமா...

World forestry day 2020

பூமியை பல வகையில் பாதுகாத்து வரும் பசுமை போர்வையாம் காடுகள் பற்றியும் அதன் வளம் காப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் தினமாக இந்நாள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. காடு என்பது பல்வேறு உயிரினங்கள் ஒன்றிணைந்து அமையப்பெற்ற ஓர் சுழல் மண்டலமாகும். பல அரிய வகை மரங்களையும், ஏராளமான விலங்குகளையும் கொண்ட இயற்கை வரம்தான் காடு. பூமியின் மொத்த பரப்பளவில் 30 சதவீதம் காடுகளாலேயே அமைந்ததாகும். காடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. உலகத்திற்கு தேவையான மழையையும், சுத்தமான காற்றையும் வழங்குவதில் காடுகளின் பங்கு மிக மிக முக்கியமானது. உலகெங்கும் சூழ்ந்துள்ள காடுகள் அதனதன் தட்பவெட்ப நிலைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஊசியிலை காடுகள், சதுப்பு நில காடுகள், இலையுதிர் காடுகள், வெப்ப மண்டல காடுகள் என பல வகையில் அவைகள் பிரிக்கப்பட்டாலும் எல்லா காடுகளும் ஒருசேர்ந்த ஓர் முக்கிய பணியையே செவ்வனே செய்கிறது. அது புவிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை சுவாசித்து பூமிக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுவதுதான். ஒரு மரமானது ...

மாலை நேர சிறப்பு வானிலை அறிக்கை:

தற்போது கடந்த சிலநாட்களாக தமிழகம் முழுவதும் கோடைகாலம் போல வெயில் அதிகமாக நிலவி வருகிறது. அதனால் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையை பொறுத்தவரை சிவகங்கை மதுரை விருதுநகர் திருச்சி சேலம் தர்மபுரி பெரம்பலூர் கரூர் நாமக்கல் புதுக்கோட்டை ஈரோடு கரூர் இராமநாதபுரம் தர்மபுரி திண்டுக்கல் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்பட்டி எட்டயபுரம் ஆகிய பகுதியில் நாளை மழை பெய்யும்.தற்போது கோவில்பட்டியில் கனமழை.