தென்னகத்தின் ஊட்டி -மாஞ்சோலை:
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை மழை பிரதேசம் மாஞ்சோலை ஆகும்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மிக அதிக மழை பெறும் பகுதி சின்னகல்லாறு. ஆனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்தியநாட்டிலே மிக அதிகம் மழை பெறும் பகுதி மாஞ்சோலை ஆகும்.
குளிர் காலமான ஜனவரி பிப்ரவரி மாதத்திலும் இந்தியாவில் மிக அதிகம் மழை பெறும் பகுதியும் மாஞ்சோலைதான். ஜனவரி பிப்ரவரி மாதத்தில் மாஞ்சோலை 1000 மிமீ வரை மழை பொழிகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 2500 மிமீ வரை மழை பொழிகிறது .
இது போக தென்மேற்கு பருவமழை காலத்திலும் தமிழகத்தில் அதிகம் மழை பெய்யும் பகுதிகளுள் மாஞ்சோலையும் ஒன்று.
உலகில் மிக அதிகம் மழை பெய்யும் மௌசின்ராம் மற்றும் சிரபுஞ்சி ஆகிய பகுதிகளை பின்னுக்கு தள்ளி ஆண்டுக்கு 5 மாதங்கள் மாஞ்சோலைதான் முதலிடத்தில் இருக்கிறது.
சில சமயங்களில் மாஞ்சோலையில் இரண்டு மூன்று நாட்கள் பெய்யும் மழைதான் மற்ற ஊரில் ஒராண்டு மழைப்பொழிவாக உள்ளது.
2007 ஆம் ஆண்டு ஐந்தே நாட்களில் 1043 மிமீ மழை மாஞ்சோலையில் பெய்துள்ளது. இப்படி பலநேரங்களில் நடந்துள்ளது. பிறபகுதிகளில் ஓராண்டு பெய்யும் மழையை மாஞ்சோலை இரண்டே நாளில் பெற்றுவிடும் அந்தளவு சிறப்பை பெற்ற மாஞ்சோலையின் மழை பட்டியலை வெளியிட்டுள்ளேன்.
2000-2010 ஆகிய 11 ஆண்டு மழை சாதனையை பதிவிட்டுள்ளேன். 2011-19 ம் ஆண்டுக்கான மழை பொழிவு தற்போதுதான் சேகரித்து வருகிறேன்.அதனால்தான் வெளியிடவில்லை. மாஞ்சோலை மலையில் உள்ள காக்காச்சி ஊத்து குதிரைவெட்டி ஆகிய பகுதிகளிலும் அதிகளவு மழை பதிவாகும் அந்த அளவுகள் பின்னர் பதிவிடுகிறேன்.
(High Impact weather event ) Highest 24 hours Rainfall in Manjolai
446 mm at Manjolai (Tirunelveli) on 27 Dec 2000
220 mm at Manjolai (Tirunelveli) on 22 Dec 2001
255 mm at Manjolai (Tirunelveli) on 30 Oct 2002
337 mm at Manjolai (Tirunelveli) on 19 Nov 2002
231 mm at Manjolai (Tirunelveli) on 06 Oct 2003
232 mm at Manjolai (Tirunelveli) on 12 June 2004
201 mm at Manjolai (Tirunelveli) on 13 June 2004
210 mm at Manjolai (Tirunelveli) on 20 Oct 2004
244 mm at Manjolai (Tirunelveli) on 12 Nov 2004
406 mm at Manjolai (Tirunelveli) on 04 April 2005
393 mm at Manjolai (Tirunelveli) on 11 Dec 2005
295 mm at Manjolai (Tirunelveli) on 03 Nov 2006
313 mm at Manjolai (Tirunelveli) on 05 Nov 2007
250 mm at Manjolai (Tirunelveli) on 28 Nov 2007
260 mm at Manjolai (Tirunelveli) on 14 Dec 2007
301 mm at Manjolai (Tirunelveli) on 18 Dec 2007
313 mm at Manjolai (Tirunelveli) on 05 Nov 2009
258 mm at Manjolai (Tirunelveli) on 06 Nov 2009
430 mm at Manjolai (Tirunelveli) on 09 Jan 2010
Comments
Post a Comment