(Posted on 02-01-2020) Tamilnadu Weather Blog
தமிழக மழைப்பொழிவு -2020
தமிழகத்தை பொறுத்தவரை குளிர்கால மழை கோடைகாலமழை தென்மேற்கு பருவமழை வடகிழக்கு பருவமழை என நான்கு பருவமழை காலங்களில் தமிழகம் மழை பெறுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் பெற்ற மழை அளவு குறித்து ஒரு ஆய்வு
குளிர்கால மழை -2020
ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்கள் தமிழகத்திற்கு குளிர்காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தமிழகம் சராசரியாக 27.9 மிமீ மழை பெறும்.கடந்த ஆண்டு குளிர் காலத்தில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களை தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறையை சந்தித்தது.
கோடை கால மழை -2020
மார்ச் ஏப்ரல் மே ஆகிய மூன்று மாதங்கள் தமிழகத்திற்கு கோடைகாலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலே மிக அதிக மழை பெய்யும் மாவட்டம் கன்னியாகுமரி. ஒட்டு மொத்த தமிழகத்தை எடுத்து கொண்டால் கோடைகாலத்தில் சராசரியாக 126.4 மிமீ மழை பொழிகிறது. ஆனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் 75.7 மிமீ மழை மட்டுமே பதிவானது .இது 40% பற்றாக்குறை. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறை.
தென் மேற்கு பருவமழை -2020
ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம். இந்த காலக்கட்டத்தில் தமிழகம் 342 மிமீ மழை பெறும். ஆனால் கடந்த ஆண்டு 421.4 மிமீ மழை பதிவானது .இது இயல்பை விட 24 % மழை அதிகம்.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகம் மழை பெய்த மாவட்டங்கள் :
1.நீலகிரி -1373 மிமீ
2.கோயம்புத்தூர் -1112 மிமீ
3.வேலூர் -598.1 மிமீ
4.சேலம் -560 மிமீ
5.கன்னியாகுமாரி -504.6 மீமீ
தேவாலா சின்னகல்லாறு வால்பாறை கோதையாறு ஆகிய பகுதிகள் அதிகம் மழையை பெற்றது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் மழை மிக குறைவாக பெய்த மாவட்டம் தூத்துக்குடி. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த மாவட்டம் நீண்ட நாட்களாக மழை இல்லாமல் இருந்தது.
வடகிழக்கு பருவமழை -2020
அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தமிழகம் 450 மிமீ மழை பெறும் .ஆனால் 477 மிமீ மழையை தமிழகம் பெற்றது .
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் அதிகம் மழை பெய்த முதல் 5 மாவட்டங்கள் :
சென்னை - 1041 மிமீ
நாகப்பட்டினம் -1038 மிமீ
கடலூர் -946 மிமீ
திருவாரூர் -834 மிமீ
செங்கல்பட்டு -830 மிமீ
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் மிக அதிகம் மழை பெய்த இடங்கள் :
1.ஊத்து (திருநெல்வேலி) -2640மிமீ
2.நாலுமுக்கு (திருநெல்வேலி) -1986 மிமீ
3.மாஞ்சோலை (திருநெல்வேலி) -1668மிமீ
4.DGP அலுவலகம் (சென்னை)-1543 மிமீ
5.பரங்கிப்பேட்டை (கடலூர் )-1341 மிமீ
6.கடலூர் -1323 மிமீ
வடகிழக்கு பருவ மழை காலத்தில் இந்தியாவிலேயே மிக அதிக மழை பெய்யும் பட்டியலில் முதல் மூன்று இடத்தை திருநெல்வேலி மாவட்டம் பெற்றுள்ளது. ஊத்து நாலுமுக்கு மாஞ்சோலை.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிலேயே மிக குறைவான மழையை பெற்ற இடங்கள் :
1.வெண்ட் வொர்த் தேயிலை எஸ்டேட் (Harison malayalam limited)
(நீலகிரி) -78 மிமீ
2.பர்வுட் எஸ்டேட் ( நீலகிரி )-78 மிமீ
3.களியல் (கன்னியாகுமரி) -79 மிமீ
4.மசினக்குடி (நீலகிரி)- 85 மிமீ
5.கிருஷ்ணகிரி -90 மிமீ
6.தாளவாடி (ஈரோடு )- 105 மிமீ
7.அன்னூர் (கோயம்புத்தூர்) -107 மிமீ
கன்னியாகுமரி ஈரோடு கோவை திருச்சி நீலகிரி திருச்சி சேலம் நாமக்கல் கரூர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் மழை பற்றாக்குறையை சந்தித்தது.
கன்னியாகுமரி கோவை மழை பற்றாக்குறையை சந்தித்தாலும் மற்ற பருவகாலங்களில் நல்ல மழையை பெற்றுள்ளது அதாவது ஆண்டு மழைப்பொழிவு 1000 மிமீ தாண்டி சாதனைப் படைத்துள்ளது.
ஆண்டு மழைப்பொழிவு -2020
கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒவ்வொரு பருவகாலங்களில் தமிழகம் எந்தளவு மழையை பெற்றது என்பது குறித்து பார்த்தோம் தற்போது ஆண்டு மழைப்பொழிவை பார்ப்போம்.
கடந்த 2020 ம் ஆண்டு தமிழகத்தில் அதிகம் மழை பதிவான முதல் 10 மாவட்டங்கள் (Jan 1-Dec 31)
1.நீலகிரி -1885 மிமீ
2.கோயம்புத்தூர் -1585 மிமீ
3.சென்னை -1572 மிமீ
4.நாகப்பட்டினம் -1420 மிமீ
5.கடலூர் -1323 மிமீ
6.திருவாரூர் -1304 மிமீ
7.திருவள்ளூர் -1229 மிமீ
8-விழுப்புரம் -1137 மிமீ
9-சிவகங்கை -1112 மிமீ
10-பெரம்பலூர் -1102மிமீ
கடந்த 2020 ம் ஆண்டு தென் மாவட்டங்களில் மிக அதிகமான மழையை பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் (1112 மிமீ மழை) .இரண்டாவதாக குமரி மாவட்டம் 1100 மிமீ மழையை பெற்றுள்ளது.
வேலூர் மற்றும் அரியலூர் மாவட்டமும் 1000 மிமீ தாண்டி மழை பதிவாகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு தமிழகத்தில் 13 மாவட்டங்கள் 1000 மிமீ க்கு மேல் மழையை பெற்றுள்ளது.
நன்றி
T.Raja M.Sc.,M.Ed.,M.Phil (Tamilnadu Weather Blog)
#TamilNaduWeather #chennai #coimbatore #madurai. #tamilnadu #weatherupdate #rainfalldata
Comments
Post a Comment