Skip to main content

வானிலை அறிக்கை:

இன்று தஞ்சை கரூர் தர்மபுரி இராமநாதபுரம் சேலம் நாமக்கல் ஈரோடு திருச்சி விருதுநகர் திருப்பூர் நாமக்கல் திண்டுக்கல் கோவை மதுரை புதுக்கோட்டை திருநெல்வேலி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு பிறகு கனமழை பெய்யும். தென்தமிழகத்தை பொறுத்தவரை பாபநாசம் மாஞ்சோலை பணகுடி வள்ளியூர் கோவில்பட்டி ஆகிய பகுதியில் இன்று கனமழை பெய்யும். ஊட்டி கொடைக்கானல் வால்பாறை பகுதிகளிலும் இன்று மழை பெய்யும்.

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தூத்துக்குடி கடலோரம் வரை மழை இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. தூத்துக்குடி மாவட்டத்தின் உள் பகுதியில் இன்று நல்ல மழை இருக்கும். உள் பகுதியில் உருவான மேகங்கள் எந்த காற்றின் திசையை பொறுத்து மாறுபடும். வாய்ப்பு இருந்தால்பதிவிடுகிறேன்

      Delete
  3. Manjolai மழை அளவு கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. மழை அளவு நாளை காலை தான் தெரியும். காலையில் பதிவிடுகிறேன்

      Delete
  4. Kovilpatti யில் 7pm முதல் அரை மனி நேரம் மழை பெய்தது.

    ReplyDelete
    Replies
    1. நாளையும் கோவில்பட்டியில் மழை பெய்யும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

இந்தியாவில் காற்றின் தரம்:

தற்போது நாடு முழுவதும் வாகனங்கள் இயங்கவில்லை. மக்கள் எல்லாமே வீடுகளில் இருக்கிறார்கள். தற்போது இயற்கை எல்லாமே மிக சந்தோசமாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான பதிவு. டெல்லி போன்ற வட மாநிலங்களில் காற்றின் மாசுபாடு மிக அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வாகனங்கள் இயங்காததால் நம் நாட்டில் காற்றின் தரம் நன்றாக உள்ளது காற்றின் மாசுபாடு அதிகளவு குறைந்துள்ளது.இந்தளவுக்கு அடியோடு குறைந்துள்ளது என்பது ஆச்சர்யமான ஒன்று. தற்போது உலகம் முழுவதும் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்கிறது. இந்த நிலை எப்போதும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அங்கும் வன விலங்குகள் சுதந்திரமாக உள்ளனர். Source: Indian Air Quality Index சுற்றுசூழல் விழிப்புணர்வு பதிவு: காடுகள்தான் நம் தாய்திருநாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின்  காரணமா...

World forestry day 2020

பூமியை பல வகையில் பாதுகாத்து வரும் பசுமை போர்வையாம் காடுகள் பற்றியும் அதன் வளம் காப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் தினமாக இந்நாள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. காடு என்பது பல்வேறு உயிரினங்கள் ஒன்றிணைந்து அமையப்பெற்ற ஓர் சுழல் மண்டலமாகும். பல அரிய வகை மரங்களையும், ஏராளமான விலங்குகளையும் கொண்ட இயற்கை வரம்தான் காடு. பூமியின் மொத்த பரப்பளவில் 30 சதவீதம் காடுகளாலேயே அமைந்ததாகும். காடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. உலகத்திற்கு தேவையான மழையையும், சுத்தமான காற்றையும் வழங்குவதில் காடுகளின் பங்கு மிக மிக முக்கியமானது. உலகெங்கும் சூழ்ந்துள்ள காடுகள் அதனதன் தட்பவெட்ப நிலைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஊசியிலை காடுகள், சதுப்பு நில காடுகள், இலையுதிர் காடுகள், வெப்ப மண்டல காடுகள் என பல வகையில் அவைகள் பிரிக்கப்பட்டாலும் எல்லா காடுகளும் ஒருசேர்ந்த ஓர் முக்கிய பணியையே செவ்வனே செய்கிறது. அது புவிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை சுவாசித்து பூமிக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுவதுதான். ஒரு மரமானது ...

மாலை நேர சிறப்பு வானிலை அறிக்கை:

தற்போது கடந்த சிலநாட்களாக தமிழகம் முழுவதும் கோடைகாலம் போல வெயில் அதிகமாக நிலவி வருகிறது. அதனால் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையை பொறுத்தவரை சிவகங்கை மதுரை விருதுநகர் திருச்சி சேலம் தர்மபுரி பெரம்பலூர் கரூர் நாமக்கல் புதுக்கோட்டை ஈரோடு கரூர் இராமநாதபுரம் தர்மபுரி திண்டுக்கல் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்பட்டி எட்டயபுரம் ஆகிய பகுதியில் நாளை மழை பெய்யும்.தற்போது கோவில்பட்டியில் கனமழை.